பூமியை விட்டு விலகும் நிலவு : நேரத்தில் நிகழவுள்ள மாற்றம்
பூமியின் ஒரே ஒரு துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு இந்த ஆய்வு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் ஆய்வில் பூமியிலிருந்து நிலவு மெல்ல மெல்ல விலகி செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பூமியில் பல வித மாற்றங்கள் நடக்கும் எனவும் பூமியிலிருந்து நிலா ஆண்டுக்கு சுமார் 3.8 சென்றி மீற்றர் வீதம் விலகி செல்வதாகவும் இதனால் பூமியில் பகலின் நேரம் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பூமியின் துணைக்கோள்
பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில் நிலா விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே மாறும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளதுடன் பூமிக்கும் மற்றும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |