சிங்கள பேரினவாதியான டேனின் மறைக்கப்பட்ட மறுபக்கம்
டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்ட விடயம் என்பது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. காரணம் என்னவென்றால், செய்த குற்றங்களுக்கு தண்டனை பெற வேண்டிய ஒருவர் அந்த தண்டனையை பெறாமலேயே உயிரிழந்தது தான்.
தீய எண்ணத்துடன் சமூகத்தில் விதைக்கப்பட்ட ஒரு சித்தாந்தம், தன் கண்முன்னாலேயே தோல்வி அடைவதை பார்த்து கொண்டு வேதனையுடன் நீண்ட காலம் வாழ வேண்டிய ஒருவருக்கு அமைதியான மரணம் கிடைத்து விட்டது எனலாம்.
சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்பட வேண்டிய ஒருவர் அகால மரணமடைவது வருத்தமளிக்கிறது. டேனுக்கு கிடைக்க வேண்டிய கொடிய அனுபவம் மரணமல்ல.
ஊழல் அரசியல்
டேன் பிரியசாத்துக்கு இருப்பது தீயதும் இருண்டதுமான ஒரு வரலாறு. அந்த வரலாறு ஊழல் அரசியல் வாதிகளும், சில விலைபோன ஊடகங்களும் சேர்ந்து உருவாக்கியது.
2014ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறையில் மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் லியனகே டேன் பிரியசாத் எனும் டேன் பிரியசாத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
2016 நவம்பர் 15ஆம் திகதி இலங்கையில் உள்ள ஒரு அச்சு ஊடகம் (பத்திரிகை) ஒன்றில் “சிங்களவரின் இரட்சகன்” என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டு இலங்கையின் முஸ்லிம் மக்களுக்கு வெடிகுண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்தால் கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக செய்ததாக செய்தி வெளியாகி இருந்தது.
டேனின் தீய செயல்கள்
டேனின் தீய செயல்கள், மலட்டு ஆடைகளுக்கு எதிரானது என கூறி முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத, கொடூர வன்முறை சம்பவங்கள் என பலவற்றை கூறலாம்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, முஸ்லிம் மக்களுக்கு எதிரான கொடூர செயல்களில் ஈடுபட்டார். டேனை தீவிர மதத் தீவிரவாதி என்று சொல்லலாம்.
டேனின் இந்த செயற்பாடுகளுக்கு பணத்தை வாரி இறைத்தது பாதாள உலகமும், போதைப்பொருள் கடத்தல் காரர்களும் தான்.
மகிந்த குடும்பத்துடன் நெருக்கமாக செயற்பட்ட டேன்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்ட டேன் பிரசாத், அரகல போராட்டத்தின் போது பாரிய வன்முறையில் ஈடுபட்டவர்களின் முதன்மையானவர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
இதேவேளை டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான துலான் மதுஷங்க பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
டேன் பிரியசாத்தின் சகோதரரை கொலை செய்ததாகக் கூறப்படும் தரப்பினர் சமீபத்தில் வெல்லம்பிட்டி பகுதியில் நடைபெற்ற ஒரு புத்தாண்டு விழாவின் போது அவரை மிரட்டியதாக தெரியவந்துள்ளது.
பாதாள உலகம்
கடந்த 20 ஆம் திகதி டேன் பிரியசாத் என்ற நபருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விசாரணைகளின்படி, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள துலான், தாக்குதலுக்குப் பிறகு டேன் பிரியசாத்தை கொல்ல திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
தற்போது டுபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான கொலொன்னாவே தனுஷ்கவிடம் தாக்குதல் குறித்து அவர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.
பின்னர் அவர் இந்த விடயம் பற்றி பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிபானி இம்ரானுக்குத் தெரிவித்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் டேன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
டேன் தற்போது கொள்ளப்பட்டாலும் எனும் வலைப்பின்னலில் டேன் ஒரு புள்ளி மட்டும் தான். தற்போது உள்ள அசாங்கம் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு துணை போகாத காரணத்தினால் இனி வரும் காலங்களில் பாதாள நடவடிக்கை என்பது சற்று இருக்கமாகவே காணப்படும்.
டேன் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மகிந்த குடும்பத்தின் மீதும் சந்தேக பார்வையை வைத்து விட்டே சென்றுள்ளது என்பதனையும் இங்கு பதிவு செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
