கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை : நால்வர் கைது!
இன்று முல்லைத்தீவில் இருந்து உந்துருளியில் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா கடத்தப்படுவதாக இன்று கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கடற்படையினர் காவல்துறை விசேடஅதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து,
சுதந்திரபுரம் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கஞ்சாவினை உந்துருளியில் கடத்தி சென்ற வேளையில் மூன்று உந்துருளியினையும் நால்வரையும் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்களிடம் இருந்து 89 கிலோ பொதிசெய்யப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. மூங்கிலாறு பிரதேசத்தினை சேர்ந்த மூவர் மற்றும் விசவமடு பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் என 44,24,24,30 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய உந்துருளி மூன்றும் மீட்கப்பட்டுள்ள. கைப்பெற்றப்பட்ட கஞ்சா மற்றும் சான்று பொருட்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முற்படுத்தியுள்ளதுடன் இவற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




