எதிர்வரும் ஜூலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு
எதிர்வரும் ஜுலை மாதம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) திட்டமிட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஜுலை மாத முதல் வாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன் இந்த வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை ரணில் தீர்மானிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வஜன வாக்கெடு
சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் ரணில் பின்னடைவை சந்தித்தால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என தெரிவித்துள்ளதுடன் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினாலும், அரசியல் காரியாலங்கள் நிறுவப்பட்டாலும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் ரணில் மூன்றாம் இடத்தை அடைந்தால், தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்தாலும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேரும், ரணில் ஏதேனும் ஒர் தரப்புடன் கூட்டணி சேர்ந்தால் 15 முதல் 20 வீத வாக்குகளைப் பெறுவார் எனவும் தனித்து போட்டியிட்டால் பாரிய தோல்வியை தழுவ நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |