இலங்கை மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிகர தகவல்
இலங்கையில் 45 நிமிட நேர மின்துண்டிப்பு அடுத்த சில நாட்களுக்கு தொடருமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு சீர் செய்ய்படும்வரை மின் துண்டிப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசியம் கருதி, தினசரி மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும், கோளாறு ஏற்பட்டுள்ள மின்பிறப்பாக்கியிலிருந்து தொடர்ச்சியாக எண்ணெய் கசிவு ஏற்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார மானவடு தெரிவித்துள்ளார்.
மேலும், மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் சமநிலையை பேணமுடியாததால் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், கோளாறை சீர்செய்வதற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதை உறுதியாகக்கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.