மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி - மீண்டும் சிமெந்தின் விலை அதிகரித்தது
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Sumithiran
இலங்கையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையை அடுத்து சிமெந்தின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
சிமெந்து நிறுவனங்கள் இந்த விலை அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில் தற்போது 50 கிலோ எடையுள்ள சிமெந்து மூடை ரூ.2300 – 2350 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதால், புதிய விலையை ரூ.500 – 600 ரூபாவால் உயர்த்த சிமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
சிமெந்து விலை உயர்ந்துள்ளதாலும், புதிய கட்டடங்களின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாலும் சிமெந்தின் தேவை குறைந்துள்ளதாகவும், இதனால் மொத்த விற்பனைக் கடைகளில் சிமெந்து இருப்பு இல்லை எனவும் சிமெந்து விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி