இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டது கப்பல்
ship
hijacked
gunmen
By Sumithiran
அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் ஓமான் வளைகுடாவில் வைத்து MV Asphalt Princess என்ற கப்பல் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பனாமா கொடியுடன் பயணித்த கப்பலே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்ட கப்பலை ஈரானை நோக்கி செலுத்துமாறு கடத்தல்காரர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கடத்தல் சம்பவத்திற்கான பொறுப்பை இதுவரை எவரும் ஏற்காத நிலையில், ஈரான் படைகளே கப்பலை கடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி