யாழ். யுவதியை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சிங்கள யுவதி! தென்னிலங்கையில் நடந்த சம்பவம்
தென்னிலங்கையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பலராலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
தியகமவில் நடைபெற்ற இளையோருக்கான மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி 2 பதக்கங்களை வென்றுள்ளார்.
வல்வெட்டித்துறை பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் 2 பதக்கங்களை வெற்றிகொண்டார்.
18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான பரிதிவட்டம் எறிதலில் தங்கப்பதக்கமும் சம்மட்டி எறிதலில் வௌ்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.
மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட யாழ். மாணவி பயன்படுத்தும் தரமற்ற நிலையில் இருந்த சம்மட்டியை கொட்டாவ வடக்கு தர்மபால மகா வித்தியாலய மாணவியான சனுமி தில்தினி பெரேராவும் அவரது பயிற்சியாளரும் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த சிங்கள மாணவியால் உயர் ரக சம்மட்டி ஒன்று யாழ். மாணவிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன், வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்
