இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய தம்பதிக்கு ஏற்பட்ட நிலை
Sri Lanka Tourism
Sri Lanka
Russia
By Sumithiran
இலங்கைக்கு சுற்றுலா வந்த ரஷ்ய தம்பதிகள் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுகுருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றது.
ரஷ்ய தம்பதிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி

ரஷ்ய தம்பதிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
வஸ்கடுவவில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து ஹிக்கடுவை பகுதிக்கு சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றது.
முச்சக்கரவண்டியின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டமையே விபத்துக்கான காரணம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டதுடன் விபத்து தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி