விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய சிறிலங்கா இராணுவத்தினரின் இன்றைய நிலை..!
விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவம் தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு சென்று அந்த இரு நாடுகளுக்காக தனித்தனியாக போரிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் முகாம் உதவியாளர்களாக அழைத்து செல்லப்பட்டு ரஷ்ய-உக்ரேனிய போரில் தள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரியான வருமானம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “நமது இராணுவத்தில் இருந்தவர்கள் ரஷ்யா, உக்ரைன் என இரு தரப்பிலும் இணைந்துள்ளனர், இலங்கை இராணுவம் இரண்டு தரப்பினராக பிரிந்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஓய்வு பெற்ற நமது இராணுவ வீரர்களுக்கு சரியான வருமானம் இல்லாமைாயால் இவ்வாறு நடக்கிறது.
இலங்கை இராணுவம்
இதற்கு இலங்கை அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது, ஏனெனில் இன்று இலங்கை இராணுவத்தினர் இரு தரப்பிலும் பிரிந்து சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றாகப் போராடினோம், ஆனால் இன்று இலங்கை இராணுவம் இரு நாடுகளுக்கிடையில் காணப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |