வாழ்நாள் இலட்சியம் இதுதான் - விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி சஞ்சனா
வவுனியா மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி சஞ்சனா குணலிங்கம் வவுனியா மண்ணுக்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாணவி மேலும் தெரிவிக்கையில், “விஞ்ஞானம் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலையையும் தேசிய ரீதியில் 81 ஆவது நிலையையும் பெற்றுள்ளேன்.
நாங்கள் பரீட்சைக்கு உண்மையில் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்று இல்லை. பாடங்களை விரும்பிப் படித்தால் போதும்.
கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்று இல்லை
சிலர் கஷ்டப்பட்டு மனதை வருத்திப் படிக்கிறார்கள். ஆனால் முதலில் பாடத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். நான் அவ்வாறு படித்ததால் தான் விஞ்ஞானத் துறையில் சாதிக்க முடிந்தது.

பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கும், பாடங்களை ஆழமாகப் புரிந்து படிப்பதற்கும் சிறந்த ஆசிரியர்கள் எனக்குக் கிடைத்தார்கள். நான் இன்று அடைந்துள்ள இந்த நிலைக்கு எனது குடும்பத்தினரும், எனக்குக் கற்பித்த ஆசிரியர்களுமே மிக முக்கிய காரணம்.
அத்தோடு, எனது நண்பர்கள், சகோதரிகளின் ஒத்துழைப்பு மற்றும் எனக்குப் பல்வேறு வழிகளில் துணையாக நின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக படிப்பை முடித்த பின் வைத்தியராக வந்து நோயாளர்களுக்கு சிறப்பாக பணியாற்றுவதே எனது இலக்கு” எனத் மாணவி சஞ்சனா குணலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்