திருகோணமலையில் ஐ.பி.சி தமிழை கடுப்பாக நோக்கிய விகாரை குழாம்!
திருகோணமலையில் வலிந்த புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயத்தை தமக்குரிய ஆதாயங்களாக மாற்ற சிறிலங்காவின் அனைத்து சிங்களக்கட்சிகளும் தத்தமது இனவாத துருப்புச்சீட்டுக்களை தீவிரமாக அடித்துவருகின்றன.
சிறிலங்காவின் பௌத்தபீடங்கள், கடும்போக்கு பௌத்த முகங்கள் மற்றும் பிரதான எதிர்க்கட்சி உட்பட்ட அரசியல் கட்சிகள் என சிறிலங்காவின் அனைத்து அரசியல் மையங்களும் இந்தவிடயத்தில் தீவிரப்படும் நிலையில் இன்று இந்த விடயத்துக்குள் பொதுபலசேனா முகமான கலகொட அத்தே ஞானசார தேரும் அதிரடியாக புகுந்துள்ளார்.
இன்று திருமலைக்கு விரைந்த ஞானசார தேரர் சிங்கள மக்கள் மத்தியில் இந்தவிடயத்தை தீவிரமாக்கும் வகையில் ஒரு ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார்.
இந்த ஊடகச்சந்திப்பில் ஐபிசி தமிழின் ஊடகர்களும் கலந்துகொண்டபோது ஊடகர்களும் கலந்திருந்தபோது அங்கிருந்த கடும்போக்காளர்கள் எமது ஊடக குழுமீது விசனத்தை திருப்ப முனைந்த போதிலும் இந்த நிலைமைகளுக்கு சளைக்காத எமது ஊடக குழு கலகொட அத்தே ஞானசார தேரிடம் வினாக்களைத் தொடுத்து அவற்றுக்குரிய பதில்களை பெற்றிருந்தனர்.
பரபரப்பான வினாக்களைக்கொண்ட இந்த நிகழ்ச்சி உட்பட்ட திருமலை நிலவரங்கள் நாளை ஐபிசி தமிழ் தொலைக்காட்சி மற்றும் அதன் சமுகவலைத்தள பரப்புகளிலும் ஒளிபரப்பரப்பாகவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 1 மணி நேரம் முன்