மோட்டார் சைக்கிளுக்குப் பதில் துவிச்சக்கர வண்டி! நூதனமாக முறையில் திருடியவர் கைது
வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளினைத் திருடியவர் சில மணிநேரங்களிலேயே சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மானிப்பாய் - சண்டிலிப்பாய் வீதியிலி இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடை அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதன் உரிமையாளர் சென்றுள்ளார்.மீள வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாமற்போயிருந்தது. அந்த இடத்தில் துவிச்சக்கர வண்டி ஒன்று காணப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்ட சுன்னாகம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸார், அதனை வைத்திருந்தவரைக் கைது செய்து விசாரணைகளின் பின் மானிப்பாய் பொலிஸாரிடம் முற்படுத்தினர்.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் மானிப்பாய் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டது.