தொடருந்தில் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பலி
Puttalam
Sri Lankan Peoples
Accident
By Laksi
ஆராச்சிக்கட்டுவ- மஹய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தொடருந்துடன் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
ஆராச்சிக்கட்டுவ மற்றும் ஆனவிழுந்தாவ உப புகையிரத நிலையங்களுக்கு இடையிலான மஹய்யாவ குறுக்கு வழியில் புத்தளம் நோக்கி பயணித்த தொடருந்தில் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
மூவர் உயிரிழப்பு
இதன்போது இன்று பிற்பகல் தனது பிள்ளையையும் மற்றுமொரு சிறுவனையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறுதொடருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி