இன்று இரவு தடம் புரண்டது தொடருந்து
Colombo
Kandy
Train Crash
By Sumithiran
கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த 'சியானே குமாரி' விரைவு தொடருந்து இன்று (25) இரவு 8.30 மணியளவில் கடிகமுவ மற்றும் உலா கோட்டே தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொடருந்தின் ஒரு சக்கரம் மட்டுமே உடைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தொடருந்து சேவை தடை
இதன் காரணமாக மலையக தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளதாகவும், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி செல்லும் இரவு அஞ்சல் தொடருந்து நீண்ட நேரம் தாமதமாக இயக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் அடிக்கடி தடம் புரள்வதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 21 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி