"கஜேந்திரகுமாரை கைதுசெய்த முறை தவறானது" - லக்ஷ்மன் கிரியெல்ல பகிரங்கம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5,10 பாதுகாப்பு அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எந்தவொரு காவல்துறை பாதுகாப்பு இல்லை.
அவ்வாறான நிலையில் அவரை கைது செய்த முறை தவறானது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (7) எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஏழுப்பிய ஒழுங்குப்பிரச்சினையில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார் .
"கைதுசெய்ய முடியாது"

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 5, 10 பாதுகாப்பு அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் அவருக்கும் எந்த காவல்துறை பாதுகாப்பு இல்லை.
தனது சாரதியுடனேயே அவர் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்கிறார். மிகவும் அமைதியான ஒருவர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்துக்கு வரும்போதும் நாடாளுமன்றத்தில் இருந்து செல்லும்போது காவல்துறையினரால் கைதுசெய்ய முடியாது, அவ்வாறு கைது செய்ய சபாநாயகர் அனுமதிக்கவும் கூடாது என்றார்.