அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய கேள்வி...! முகத்திற்கு நேரே பதிலடி கொடுத்த சிங்கப்பெண்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா(Ramanathan Archchuna), தனிப்பட்ட முறையில் எந்த ஒரு அதிகாரியையும் தாக்கி வார்த்தைகளை பிரயோகிக்க முடியாது என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளரான பெண்ணொருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று (13) அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற முதலாவது அபிவிருத்தி கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் பதிலளித்த பெண் அதிகாரி, தங்களது பதவிக்கு ஏற்ற கல்வி தகைமைகளுடன் தான் நாங்கள் அனைவரும் இந்த கலந்துரையாடலுக்கு வந்துள்ளோம்.
இந்த அபிவிருத்தி திட்டத்திற்கான அனைத்து வேலைதிட்டங்களும் முறைப்படியே நடக்கவுள்ளது. அதற்கான அறிக்கைகளை எமக்கு சமர்பிக்க முடியும் என குறித்த பெண் அதிகாரி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவற்றை கீழ்வரும் காணொளியில் காணலாம்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |