உலகில் சரியான நேரத்தில் செயற்படும் விமான நிலையங்கள் எவை தெரியுமா...!
சர்வதேச அளவில் நேரம் தவறாமையை கடைப்பிடிக்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் குறித்த பட்டியலை சர்வதேச விமான போக்குவரத்து ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டு உள்ளது.
சரியான நேரத்துக்கு விமானம் இயக்கும் நிறுவனங்கள், நேரம் தவறாமையை சரியாக கடைப்பிடிக்கும் விமான நிலையங்கள் பற்றி விமான பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் உள்ளது.
அவர்களுக்காகவே, விமான போக்குவரத்து ஆய்வு நிறுவனமான சிரியம் என்ற அமைப்பு சரியான நேரத்திற்கு செயல்படும் விமான நிலையங்கள், விமானங்கள் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி பட்டியல் வெளியிட்டு உள்ளது.
இதன்படி உலகில் நேரம் தவறாமையை மிகச்சரியாக கடைபிடிக்கும் விமான நிறுவனங்கள் வருமாறு,
ஏரோ மெக்சிகோ சவுதியா டெல்டா ஏர்லைன்ஸ் ( அமெரிக்கா) எல்ஏடிஎஎம் ஏர்லைன்ஸ்(சிலி) கத்தார் ஏர்லைன்ஸ் அஜூல் ஏர்லைன்ஸ்(பிரேசில்) ஏவியங்கா (கொலம்பியா) .ஐபீரியா(ஸ்பெயின்) ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் (டென்மார்க், நோர்வே, சுவிடன்) 10. யுனைட்டைட் ஏர்லைன்ஸ்( அமெரிக்கா)
விமான நிலையங்கள்
ரியாத் கிங் காலியத் சர்வதேச விமான நிலையம் லிமா ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையம் மெக்ஸிகோ சிட்டி பெனிட்டோ ஜுரேஸ் சர்வதேச விமான நிலையம் சால்ட் லேக் சிட்டி சர்வதேச விமான நிலையம் சாண்டியாகோ ஆர்டுரோ மெரினோ பெனிடெஸ் சர்வதேச விமான நிலையம் மின்னியாபோலிஸ் செயின்ட் போல் சர்வதேச விமான நிலையம் வோஷிங்டன் டல்லாஸ் சர்வதேச விமான நிலையம் டெடராய்ட் மெட்ரோபொலிட்டன் வயானே கவுண்டி விமான நிலையம் ஓஸ்லோ கார்டெர்மொயன் விமான நிலையம் தோஹா ஹமாத் சர்வதேச விமான நிலையம்
நடுத்தர விமான நிலையங்கள்
பனாமா டோகுமென் சர்வதேச விமான நிலையம் ஒசாகா இடாமி சர்வதேச விமான நிலையம் பிரேசிலா சர்வதேச விமான நிலையம் ஆகியன இடம்பெற்றுள்ளன.
சிறிய விமான நிலையங்கள் பட்டியல்
எல்சால்வடார் சர்வதேச விமான நிலையம், கயாகுயில் ஜோஸ் கோயாகுயின் டி ஒல்மெடோ சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |