இந்தியா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்காவில் கைது
Bandaranaike International Airport
Colombo
Gold smuggling
By Sumithiran
இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க திரவத்துடன், இந்தியா செல்ல முயன்ற நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
சிறி லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில்

கொழும்பு வாழைத்தோட்டப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டவராவார்.
சிறி லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் மும்பை செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இளைஞரை, சந்தேகத்தின் பேரில், எக்ஸ்ரே பரிசோதனைக்கு சுங்க அதிகாரிகள் உட்படுத்தியுள்ளனர்.
தங்க திரவத்தை அவரது உடலில் மறைத்து

இதன்போது, ஒரு கிலோ 280 கிராம் எடையுள்ள தங்க திரவத்தை அவரது உடலில் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்… 23 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி