அம்பலாங்கொடை பாடசாலையில் திருட்டு: சந்தேகநபர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Arrest
By Pavi Sep 17, 2026 05:41 AM GMT
Report

அம்பலாங்கொடை பாடசாலை ஒன்றின் கணினிப் பிரிவை உடைத்து இரண்டு டெப் கணினிகளை திருடியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் ஒருவர்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வீடுகளை உடைத்து திருடியமை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட  20 குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (16.09.2026) காலை அம்பலாங்கொட, தலுக்கந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மீட்கப்பட்ட சடலம்

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மீட்கப்பட்ட சடலம்

மேலதிக சட்ட நடவடிக்கை

சந்தேக நபரிடமிருந்து சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் வீடொன்றில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பலாங்கொடை பாடசாலையில் திருட்டு: சந்தேகநபர் கைது | Theft At Ambalangoda School Suspect Arrested

போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ள சந்தேகநபர், போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அம்பலாங்கொடை மற்றும் மேலும் சில காவல் நிலையங்களுக்கு சந்தேகநபருக்கு எதிராக வீடுகளை உடைத்து திருடியமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: அரசாங்கத்தின் பரிசு

செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: அரசாங்கத்தின் பரிசு

22வது திருத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் : எச்சரிக்கும் ஜீ.எல். பீரிஸ்

22வது திருத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் : எச்சரிக்கும் ஜீ.எல். பீரிஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016