போலி இலக்கத் தகட்டுடன் சொகுசு கார் : கைப்பற்றியது தெல்லிப்பழை காவல்துறை
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Jaso
போலி இலக்க தகட்டுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை காவல்துறையினரால் நேற்றையதினம்(20) மீட்கப்பட்டது.
மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில் தெல்லிப்பழை காவல்துறையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் நேற்று (20/10/2024) மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட புலனாய்வு தகவலுக்கமைய மீட்கப்பட்ட கார்
தெல்லிப்பழை காவல்துறையின் விசேட புலானாய்வு தகவலுக்கமைய தெல்லிப்பழை காவல் நிலைய பொறுப்பதிகாரி W.M.உதயபால தலைமையில் மேற்படி கார் மீட்கப்பட்டது.

சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதா..!
மேற்படி கார் குற்றச்செயல்களுக்கு அல்லது போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்