தென்னியன்குளம் அ.த.க பாடசாலைக்கு கிடைத்த வரலாற்று வெற்றி
Mullaitivu
Volleyball Sport
By Vanan
மு/ தென்னியன்குளம் அ.த.க பாடசாலையின் மாணவர்கள் வலயமட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நேற்று (10) மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற துணுக்காய் வலயமட்ட கரப்பந்தாட்டப் போட்டியில், 16 வயதின் கீழ் ஆண்கள் பிரிவினர் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக வலயமட்ட போட்டியில் பங்கு பற்றிய முதல் அணி இதுவென்பதுடன், முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளனர்.
சுகாதாரம் உடற்கல்வி பாடத்திற்கு உரிய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்படாத நிலையில், அதிபர் மற்றும் ஏனை துறைசார் பாட ஆசிரியர்களால் மாணவர்கள் பயிற்றுவிக்கபட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி