அநுர மீது நம்பிக்கை உள்ளது! தமிழரசுக் கட்சியில் இருந்து இப்படியும் ஒரு குரல்
ஜனாதிபதி மீது நாம் நம்பிக்கை வைத்துள்ள போதிலும் அந்த நம்பிக்கை நடைமுறைக்கு வருமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம்,தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வடக்கு மாகாண விஜயம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வடக்குக்கு வருகை
கடந்த காலங்களில் வடக்குக்கு வருகை தந்த ஜனாதிபதிகள் தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தவர்களாகவும்,அவர்களை காணாமல் ஆக்கியும், இடம்பெயரக் காரணமானவர்களாகவும் இருந்ததால் மக்கள் மத்தியில் வெறுப்பு காணப்பட்டது.

ஆனால் இந்த தலைமுறை ஜனாதிபதிகளின் கொடூரமான முகத்தை பார்க்கவில்லை. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அத்தகைய கொடூரமான முகம் இருப்பதாக நான் கூறவரவில்லை.
இளம் துடிப்பான நல்ல விடயங்களை பேசுகின்ற ஒரு ஜனாதிபதியாக இவர் இருக்கிறார். எங்களுக்கும் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. நாட்டை முன்னேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அந்த நம்பிக்கை நடைமுறைக்கு வருமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ஜனாதிபதியின் வடக்கு வருகை குறித்து பத்திரிகைகள் வாயிலாகவே தாம் அறிந்ததுடன், அதிகாரப்பூர்வமான அழைப்புகள் எதுவும் விடுக்கப்படவில்லை” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |