அமைச்சரவை மாற்றத்தின் எதிரொலி! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படும் வரை அது தொடர்பில் யாருக்கும் தெரியாது என்று விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் கடமைகளை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்குள் நெருக்கடி
அரசாங்கத்திற்குள் எந்த நெருக்கடியும் இல்லை என்றும் அரசாங்கத்திற்குள் ஒரு நல்ல சூழல் இருப்பது மிகவும் தெளிவாக தெரிவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டால், அது வெளியே செல்லும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மறுசீரமைப்பு அரசாங்கத்திற்குள் கொதித்து வரும் நெருக்கடி வெளிச்சத்திற்கு வந்த ஒரு சந்தர்ப்பம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் அமைச்சர் கே.டி. லால் காந்தவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
