இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேசிய பாதுகாப்பிற்கு சிறந்த உத்தரவாதம் : அமைச்சர் பிமல் பெருமிதம்
ஒரு வழக்கறிஞரின் கொலையை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஊடகங்கள் ஒரு கருத்தை உருவாக்க முயற்சிப்பதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐ.சி.சி கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடத்தப்படுமா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் இலங்கைக்கு வரமாட்டார்கள்
கிரிக்கெட் வீரர்கள் பெரும் தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளனர் என்றும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால், அவர்கள் தனியார் விமானங்கள் மூலம் இலங்கைக்கு வரமாட்டார்கள் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான ஹோட்டல்கள் இல்லாததால் மருத்துவமனை அறைகள் கூட ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேசிய பாதுகாப்பிற்கான சிறந்த உத்தரவாதம் என்றும் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டுகிறார்.
நேற்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |