பாரிய தேங்காய் எண்ணெய் மோசடி : தேரர் கைது
குளியாப்பிட்டிய தேங்காய் எண்ணெய் வியாபாரி ஒருவரிடம் தேங்காய் எண்ணெய் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் மாளிகாவத்தை சிறி போதிராஜாராம விகாரையின் விகாராதிபதி உவத்தண்ணே சுமண தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
ஏ.ஜயவிக்ரம பெரேரா என்ற வர்த்தகர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்ர்படுத்தப்பட்ட பின்னர் தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேங்காய் எண்ணெயைப் பெற்றுக் கொண்டு மோசடி
முறைப்பாடு செய்த வர்த்தகரிடம் இருந்து பத்து மில்லியன் ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெயைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்தமைக்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை
மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து தேங்காய் எண்ணெய் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபரான தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
சந்தேகநபர் குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (20) கைது செய்யப்பட்டார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |