பஷிலை பெரிய சூரர் என்றார்கள்! ஒன்றுமே நடக்கவில்லை - எதிர்க்கட்சி கிண்டல்
தற்போது பெற்றோலின் விலை அதிகரித்துள்ளது. விலை சூத்திரத்தின் பிரகாரமே இவ்வாறு விலை அதிகரித்திருப்பதாக உதய கம்பன்பில தெரிப்பதாக இருந்தால் உலக சந்தையில் விலை குறைவு ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் இங்கு விலைகளில் குறைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.அவ்வாறு இங்கு இடம் பெறவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
உலக சந்தையில் ஒரு பெரலின் விலை 45.5 டொலராக இருந்த போது குறைக்காதவர்கள் தற்போது ஒரு பெரலின் விலை 100 ஆக உயர்ந்த பின்னர் விலை சூத்திரத்திற்கு ஏற்ப அதிகரித்ததாக கூறுகிறார்.
உலக சந்தையில் நுகர்வு அதிகரிக்கும் போது தேவையும் கூடும்.விலைகளும் அதிகரிக்கும். உதய கம்பன்பில வெறும் விலை சூத்திரத்தை வைத்துக் கொண்டு கைவாறு அடிக்கிறார்.
இந்தக் கைவாறுகளை விட்டு விட்டு நம்பிக்கையில்லாப் பிரேரனைக்கு தயாராகுமாறு கூறுகிறோம். எதிர்க் கட்சியக எமது எமது கடமைகளை செய்துள்ளோம்.மொட்டுக் கட்சியின் உறுப்பினர்களில் சிலரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதாக கூறியிருந்தனர்.
வாக்கெடுப்பு நாளில் இதைக் கண்டு கொள்ளலாம். சாகரவும் உதயகம்பன்பிலவினதும் விவாதங்களை இன்னும் காணவில்லை. சாகரவின் ஆடையும் அவிழ்ந்து உதயவின் ஆடையும் அவிழ்ந்து நிர்வாணமாக நிற்பதா அல்லது உண்மையாகவே மக்கள் மீது இரக்கம் கொண்டு எதிராக வாக்களிப்பதா என்பது அர்களுடைய கையிலுள்ளது.
பசில் வந்தால் எண்ணெய் விலை குறையும் என்றனர். பஷில் இல்லை எந்தப் பெரிய நபர் வந்தாலும் விலையைக் குறைக்க மாட்டார்கள்.ஏனெனில் மக்கள் மீது இவர்களுக்கு அன்பும் இரக்கமும் இல்லை.
ஏழு மூளைகளுடன் வந்து நிதி அமைச்சராக பதவி ஏற்ற பஷில் ஏழு மூளையில் ஒரு சிறு பகுதியைப் பயன்படுத்தி முடியுமானால் எண்ணெய் விலையை குறைக்கச் சொல்லுங்கள்.
புதிதாக ஒன்றையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஏலவே நடைமுறையிலிருந்த விலைக்கே எண்ணெய் விலையை மக்களுக்கு வழங்கினால் போதுமானது. புதிதாக எந்த மாற்றங்களையும் ஏற்ப்படுத்த வேண்டிய தேவையில்லை.
இன்று மஹிந்த ராஜபக்ஷ அவருடைய வயதுகேற்ப இயலாமையிலுள்ளார். கோட்டபாய நாளுக்கு நாள் மக்கள் அபிமானத்தை இழந்து வருகிறார், இல்லை முற்றிலுமே இழந்து விட்டார்.
இன்று நாட்டில் யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்தி வெகுஜன ஆதரவை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது, இன்று இனவாதத்தையும் முன்கொண்டி செல்ல முடியாது.
எனவே வெகுஜன ஆதரவைப் பெரும் ஒருவரைத் தோடிக் கொண்டிருக்கின்றர். நாட்டில் சமகால உன்மையான பிரச்சிணை பொருளாதாரப் பிரச்சிணையாகும். எனவே பஷிலை இந்த விடயத்தில் பெரிய சூரர் போன்று காண்பித்து முயற்சிக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.