வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்ட திலீபனின் 37ஆவது நினைவு தினம்!
தியாக தீபம் திலீபன் 37வது நினைவு தினம் வவுனியா ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் (24) நினைவுத்தினம் வவுனியாவில் (Vavuniya)உள்ள பொங்குதமிழ் தூபியில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது பொது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி கா.ஜெயவனிதாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.
37வது நினைவு தினம்
அதனை தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பொங்கு தமிழ் தூபியில் சுடரேற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.
இவ்வஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
