சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பிக்கு அறிவு இருக்குமென நான் நினைக்கவில்லை- ஹாபிஸ் நஸீர் பதிலடி!

Sri Lanka Parliament Z.A.Nazeer Ahamed
By Vasanth Feb 16, 2021 03:02 PM GMT
Report

  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால், முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேல் சாத்தியப்படாதென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று செவ்வாய்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இத தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறுபான்மை சமூகங்களின் (தமிழ், முஸ்லிம்) சுமார் 12 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஒரு தேசியப் பட்டியலையேனும் வழங்காமல் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்குப் பாரிய துரோகம் இழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருபதாவது திருத்தத்தை ஆதரித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களை விமர்சித்த மரிக்கார் எம்பிக்குப் பதிலளிக்கும் வகையில், அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் பற்றி விமர்சிக்குமளவிற்கு, சூனிய அரசியல் செய்யும் எந்தவித அரசியல் ஞானமுமற்ற, மரிக்கார் எம்.பிக்கு அறிவு இருக்குமென நான் நினைக்கவில்லை. தனித்துவ கட்சியின் இராஜதந்திரங்களை தெரிந்து கொள்ளும் அறிவும் மரிக்காருக்கு இல்லை. வெறும் அபிவிருத்தி அரசியல் கோஷம் செய்யும் மரிக்கார் எம்.பி, உரிமை அரசியலுக்குள் மூக்கை நுழைக்கக் கூடாது.

வடக்கு கிழக்கின் மேய்ச்சல் தரைகள் பறிபோவது பற்றியும் இவருக்குத் தெரியாது. திட்டமிட்டவாறு காணிகள் பறிபோவதால், ஏழை விவசாயிகள் படும் அவஸ்தையும் மரிக்காருக்குப் புரியாது. அரச உயர் பதவிகளில் சிறுபான்மை இனத்தவரை உள்வாங்குவதற்காக, நாங்கள் எதிர் நீச்சலடிப்பதும் இந்த எம்.பிக்கு விளங்காது. நவீன குளியலறையில் குளிக்கும் மரிக்கார், வாய்க்கால், வரப்பு, நீர்ப்பாய்ச்சல், விவசாயம் பற்றி எதுவும் தெரியாதவர்.

பேரினவாதத்துக்கு மட்டும் சாமரம் வீசும் மரிக்கார் எம்.பி, சிறுபான்மை அரசியலின் அபிலாஷைகள் பற்றி நன்கு படித்தால், அவருக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் தீர்ந்துவிடும். சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளும் இலட்சணத்தில் உள்ள கட்சியில் இருக்கும் மரிக்கார் எம்.பி, எவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்வார்.

இருபதை ஆதரித்ததன் நோக்கத்துக்குப் பின்னால் சமூகங்களுடனான இணக்கப்பாடு உள்ளது. இதை, மரிக்கார் புரிந்து கொள்ளல் அவசியம். ஏனைய சமூகங்களிடமிருந்து முஸ்லிம்கள் தனிமைப்படுதல் மற்றும் அந்நியப்படும் நிலைமைகளை இல்லாமல் செய்யும் சிந்தனைகளும் இந்த ஆதரவில் உள்ளன.

அத்துடன் முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்புக்கான உத்தரவாதம், ஜனாஸாக்களை அடக்கம் செய்தல் ஆகியவையும் இதில் தங்கியுள்ளன. அதுமாத்திரமன்றி இழந்துபோன முஸ்லிம் சமூகத்தின் பேரம்பேசல் சக்தியை வேறு வகையில் நிரூபிக்கும் இராஜதந்திரங்களும் இதில் உள்ளன. மரிக்கார் எம்.பி இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லாவிடின் புரியும் வரை வாய்மூடி இருக்க வேண்டும் என்றும் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025