நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.
யாழ் நகரின் நுழைவுப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்... நடவடிக்கை எடுக்குமா நல்லூர் பிரதேசசபை....
மேலதிக பேருந்து சேவை
அத்துடன், மாணவர்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 'சிசு செரிய' உட்பட மேலதிக பேருந்துகள் நாளை (07) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இதேவேளை அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |