இணைக்கப்பட்டது யாழ்ப்பாணம்: சரணடைந்த இந்தியா - நன்றி தெரிவிக்கும் தமிழரசுக் கட்சி
யாழில் (Jaffna) உள்ள கலாசார நிலையத்தின் பெயரை மீண்டும் மாற்றியதையும் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு உள்ளதையும் வரவேற்றுள்ள தமிழரசுக் கட்சி இந்தியாவிற்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களிற்கு முன் இந்திய தூதுவர் மற்றும் இலங்கையின் அமைச்சர்கள் யாழ்ப்பாணம் என்ற பெயரை மாற்றி திருவள்ளுவர் கலாசார மையம் என்ற புதிய பெயரை அறிவித்து இருந்தனர்.
யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாசார மையம்
இதற்கு பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானமும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி மீள்பலிசீலனை செய்ய வேண்டுமென இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்றையதினம் யாழ்ப்பாண திருவள்ளுவர் பண்பாட்டு மையம் (Jaffna Thiruvalluvar Cultural Centre) என்பதாக மீண்டும் பெயரை மாற்றி உள்ளனர். அதேபோல தமிழிற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டும் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நன்றி கூறி இந்திய தூதுவருக்கு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் கடிதமொன்றையும் இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |