வெருகல் ஆர்ப்பாட்டத்தில் கைதானவர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Law and Order
By Independent Writer
Courtesy: நிருபர் எம்.என்.எம்.புஹாரி
வெருகல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (22) மூதூர் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கானது மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி வசீம் அஹமட் முன்னிலையில் இன்றைய தினம் (22) நகர்த்தல் பத்திரத்தின் மூலம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
சரீர பிணை
இதன்போது குற்றவாளிகள் தரப்பில் முன்னிலையாகிய சகிதீன் மற்றும் முகமட் ஆகிய சட்டத்தரணிகளால் பிணை விண்ணப்பம் கோரி சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 6 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |