புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்: நீதியமைச்சர் சூளுரை
"விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள், புலிகள் மாதிரிக் காட்சியளிப்பவர்கள், பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்."
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
உயிரிழந்த உறவுகளை நினைவேந்துவதை தடுக்க முடியாது
"போரில் உயிரிழந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்தும் போது அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள், புலிகள் மாதிரிக் காட்சியளிப்பவர்கள், பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள்.
அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது. சட்டம் தன் கடமைமையச் செய்யும். நீதிமன்றம் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாகச் செயற்படும்.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் தடை
விடுதலைப் புலிகள் அமைப்பு, இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்." - என்றார்.
கடந்த மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கட்டுநாயக்காவிற்கு நேரடி விமான சேவை ஆரம்பம்:சுற்றுலா பயணிகளுடன் வந்த விமானத்திற்கு வரவேற்பு (படங்கள்)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |