இஸ்ரோ வெளியிட்ட எதிர்பாராத அதிர்ச்சி தகவல் : பலரும் கவலை
நிலவை ஆய்வு செய்யும் முகமாக சந்திராயன் 3 விண்கலத்தின் மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் வெடித்து சிதறும் ஆபத்தில் உள்ளதாக இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை பலரையும் கவலையடையச் செய்துள்ளது.
இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி சந்திரயான் விண்கலத்தை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பியது. 14 நாட்களில் கொடுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் முடித்த விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் இரவு பொழுது வந்ததால் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டு தூக்க நிலைக்கு அனுப்பப்பட்டன.
விக்ரம் லேண்டருக்கும் பிரக்யான் ரோவருக்கும் பெரும் அச்சுறுத்தல்
இந்நிலையில் இந்த விக்ரம் லேண்டருக்கும் பிரக்யான் ரோவருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதாவது நிலவில் தற்போது நுண் விண்கற்கள் விழுந்து வருகின்றன. அவை நிலவில் விழும் போது குண்டு வெடிப்பது போன்ற பாதிப்பு ஏற்படும்.
இந்நிலையில் அந்த நுண் விண்கற்களால் தூக்க நிலையில் உள்ள விக்ரம் லேண்டரும் ரோவரும் தாக்கப்படலாம் என இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ விண்கலம் போன்ற
இதனால் அவை வெடித்து சிதறும் ஆபத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அப்பல்லோ விண்கலம் இதேபோன்ற பாதிப்பை சந்தித்தாகவும் இஸ்ரோ அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிலவின் வெளிப் பகுதியில் இருந்து விக்ரம் லேண்டருக்கும் பிரக்யான் ரோவருக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பது இஸ்ரோ விஞ்ஞானிகளையும் இந்திய மக்களையும் கவலை அடைய செய்துள்ளது.