49 கிலோவுக்கும் அதிக கஞ்சா பறிமுதல் - கடற்படையினர் அதிரடி சுற்றிவளைப்பு
Sri Lanka Police Investigation
Sri Lanka Navy
Northern Province of Sri Lanka
Crime
By Dharu
நெடுந்தீவு கடற்பரப்பில் படகு மூலம் 49 கிலோவுக்கும் அதிக கஞ்சாவை கடத்திச் செல்ல முற்பட்ட மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் மருதங்கேனி மற்றும் மண்டைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த 25, 32, 42 வயதுகளையுடைவர்களென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று அதிகாலை நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பொது அப்பகுதியில் கடமையிலிருந்த கடற்படையினர் அவர்களிடம் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சோதனை

குறித்த சோதனையில், அவர்கள் 49 கிலோ 906 கிராம் நிறையுடைய கஞ்சாவை கடத்த சென்றமை தெரியவந்துள்ளது.
இதையடுதது அவர்கள் மூவரும் இன்று (26) கைட்ஸ் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்தற்கான நடவடிக்கைகளை நெடுந்தீவு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி