கட்டுநாயக்காவில் தரையிறங்கிய மூவர் அதிகாலைவேளை கைது
Bandaranaike International Airport
Sri Lanka Customs
By Sumithiran
45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று இலங்கையர்கள் இன்று (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியவேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
'கிரீன் சிக்னலை' பயன்படுத்த முயன்ற மூவரையும் இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள்
24, 28 மற்றும் 30 வயதுடைய சந்தேக நபர்கள் துபாயில் சிகரெட்டுகளை வாங்கி டோஹா வழியாக இலங்கைக்கு கடத்தியதாக கூறப்படுகிறது.
அவர்கள் எடுத்துச் சென்ற 15 சூட்கேஸ்களில் இருந்து 300,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் கொண்ட 1,503 சிகரெட் அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் அவர்களை தடுத்து வைத்து, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி