ஜேர்மனியில் இருந்து இரகசியமாக எடுத்துவரப்பட்ட நவீன ஸ்கேனர்: வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது
வவுனியாவில் காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழர் பகுதியில் அனுமதி பத்திரமின்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நிலத்தை சோதனைக்கு உட்படுத்தும் நவீன ஸ்கேனர் இயந்திரத்துடன் வைத்தியர் உள்ளிட்ட மூவர் நேற்றையதினம் (10) கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைதான சந்தேகநபர்கள் சுங்க திணைக்களத்திற்கு தெரியாமல் மோசடி செய்து ஜேர்மனியில் இருந்து இரகசியமாக குறித்த நவீன ஸ்கேனரை கொண்டு வந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியாவில் விசேட காவல்துறை புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான இந்த ஸ்கானர் இயந்திரத்தை 15 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.