சட்டவிரோத மாணிக்கக்கல் விற்பனை : சோதனையில் சிக்கிய பிக்கு
இரண்டு நீல நிற மாணிக்க கற்களை விற்பனை செய்ய முயன்ற குற்றத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்லந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த மூவரில் பிக்கு ஒருவர் அடங்கியுள்ள நிலையில், இவர்கள் சுமார் 370 மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்க கற்களையே விற்க முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
இதன்போது கொஸ்லந்த காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், கைது செய்யப்பட்ட பிக்கு வெலிவேரிய பிரதேசத்தில் வசித்துவருவதோடு, மற்றைய சந்தேக நபர்களில் ஒருவர் 72 வயதுடையவர் எனவும், அவர் பிரபல அரசியல் கட்சியொன்றின் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் தந்தை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணிக்கக்கற்களை கைப்பற்றிய காவல்துறையினர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |