21 வயதுடைய யாழ் இளைஞர் உட்பட இருவர் வவுனியாவில் அதிரடி கைது
வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (18) இடம்பெற்றுள்ளது.
பண்டாரிக்குளம் காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, பண்டாரிக்குளம் காவல்துறையினர் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து மூன்று கிராம் 300 மில்லி கிராம் ஐஸ்போதைப் பொருளும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து 266 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் மற்றும் யாழ் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து 230 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்க்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
