ஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம்
புதிய இணைப்பு
அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதல் இணைப்பு

அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதுடன், பின்னர் தனியார் பேருந்து ஒன்றும் குறித்த பேருந்துகளில் ஒன்றைய மோதியதில் பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிங்கராஜ வனத்தில் கைவரிசையைக் காட்டிய சீனப் பிரஜைகள்: 250 பூச்சியினங்கள் சேகரிப்பு: நால்வருக்கு விளக்கமறியல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |