கெஹெலியவிற்கு எதிரான வழக்கு : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு (Keheliya Rambukwella) எதிரான வழக்கை விசாரிப்பதற்கு மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நீதித்துறை (திருத்தச்) சட்டத்தின் பிரிவு 12 இன் விதிகளின்படி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசி இறக்குமதி
குறித்த கோரிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் குறித்து பரீசிலனை செய்யப்பட்டு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி தொடர்பான வழக்கை விசாரிக்கவே குறித்த நீதயரசர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தெரிவிக்க நடவடிக்கை
இதன்படி, மஹேன் வீரமன், அமலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகிய மூவரே இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், மஹேன் வீரமன் என்பவர் செப்டெம்பரில் ஓய்வு பெறவிருப்பதால், அவர் குழுவிலிருந்து விலகுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் (Attorney General's Department) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தலைமை நீதிபதிக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
