மற்றுமொரு கோரவிபத்து - மூவரின் உயிர் பறிபோனது (படங்கள்)
accident
police
death
investigation
By Sumithiran
வரகாபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி மற்றும் அரச பேருந்து மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, இன்று காலை காலி – பூஸா – வெல்லபட ரயில் கடவையில் வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் மோதி முச்சக்கரவண்டியில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


