கோர விபத்தில் சிக்கி 4 மாதக் குழந்தை உட்பட மூவர் பலி!
Death
Police
Accident
SriLanka
By Chanakyan
கொட - வட்டரெக்க சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 4 மாதக் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றுடன் லொறியொன்று நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் சென்றவர்களே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி