பூமியை நெருக்கமாக கடக்கவுள்ள பாரிய விண்கற்கள்: ஆபத்து ஏற்படுமா...!
விரைவில் பூமியை 3 பாரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
இந்த பாரிய விண்கற்கள் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது.
பாரிய 3 விண்கற்கள்
இந்த விடயம் குறித்து நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கையில்,
“முதலாவதாக பூமியை 2024 டிபி2 என்று பெயிரிடப்பட்ட விண்கல்லே கடந்து செல்லவுள்ளது.
இந்த விண்கல் 110 அடி விட்டம் கொண்டுள்ளதுடன் 7.31 இலட்சம் கி.மீ தொலைவில் இது பூமியை கடந்து செல்லவுள்ளது.
இதன் பாதை தற்போது வரை சீராகவே காணப்படுகின்றது. எனினும், ஏதேனும் பிரச்சினை காரணமாக அதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் பூமிக்கு பாதிப்பு பெரும் ஏற்படலாம்.
இரண்டாவது விண்கல்
இதேவேளை, பூமியை இரண்டாவதாக 2007யூடி3 என்று பெயிரிடப்பட்ட விண்கல்லே கடந்து செல்லவுள்ளது.
இது, பூமியிலிருந்து 42 இலட்சம் கி.மீ தொலைவில் கடந்து செல்ல இருப்பதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது.
மூன்றாவது விண்கல்
இருப்பினும், 3ஆவது விண்கலான 2020 டபிள்யூ.ஜி சற்று அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இந்த மூன்றாவது விண்கல் 500 அடி விட்டம் கொண்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 30 இலட்சம் கி.மீ தொலைவில் மணிக்கு 33,947 கி.மீ வேகத்தில் இது செல்லவுள்ளது.
இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டு பூமியை மோதினால், அது விழுந்த இடத்தில் 2 கி.மீ ஆழத்திற்கு 4 கி.மீ அகலத்திற்கு பெரும் பள்ளம் உருவாகும்.
அத்துடன், 10 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும்.
விண்கல் விழுந்த இடத்திலிருந்து 500 முதல் 1000 கி.மீ சுற்றளவுக்கு எந்த கட்டிமும் இருக்காது. எல்லாம் தரை மட்டமாகிவிடும் என்பதுடன் எரிமலை வெடிப்பு, சுனாமி ஏற்படும்.
ஆனால், இந்த விண்கற்கள் செல்லும் பாதை சீராக இருப்பதன் காரணமாக எந்த பாதிப்புமில்லையென விஞ்ஞானிகள் கூறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்.. |