கறுவா ஏற்றுமதியால் கிடைத்துள்ள பாரிய வருமானம்
2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கறுவா ஏற்றுமதி மூலம் 35,778 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கறுவா ஏற்றுமதி
இந்நிலையில், வருடத்தின் முதல் 9 மாதங்களில் 11,347 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மாகாணத்தில் கிராமிய மட்டத்தில் அலங்கார இலைகளின் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண விவசாய திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன், அலங்கார இலைகள் உள்ளிட்ட சில வகையான செய்கைகளின் மூலம் விவசாயிகள் அதிக வருமானத்தை ஈட்ட முடியுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில், தற்போது சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்துள்ள நிலையில், ஹோட்டல்களை அலங்கரிக்கும் இந்த அலங்கார இலைகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |