கொழும்பு Port City கடலில் யாழ். இளைஞரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Port City Colombo
By Sathangani
கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கொழும்பிற்கு வந்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |