சொகுசு காரில் பயணித்த மூவர் கேரள கஞ்சாவுடன் கைது!
கேரளக் கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த சொகுசு காரினை இன்று காலை வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வழிமறித்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அதில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 08 கிலோ கேரள கஞ்சாவினை மீட்டதுடன், வாகனத்தையும், அதில் பயணித்த குருணாகல் மற்றும் கண்டிப் பகுதியைச் சேர்ந்த 44, 41, 39 வயதுடைய பெண் ஒருவர் உட்பட மூவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் பன்னிரெண்டு இலட்சம் ரூபாய் இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
