நீதிமன்ற வழக்குகளில் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள்! விசாரணை மையத்தில் ராஜபக்சர்கள்

Gotabaya Rajapaksa Shasheendra Rajapaksa Yoshitha Rajapaksa
By Dharu Jun 22, 2026 08:34 AM GMT
Report

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகள் கடந்த வாரம் நீதிமன்றத்தில் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

முதலாவதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், பிரதிவாதிகளிடமிருந்து இன்னும் பதில் வராததால், எந்தவொரு முடிவையும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க இயலவில்லை என்று கூறினார்.

மகிந்தவின் மகனின் கடற்படை வழக்கு! விசாரணையை தவிர்த்த கடற்படை தளபதி

மகிந்தவின் மகனின் கடற்படை வழக்கு! விசாரணையை தவிர்த்த கடற்படை தளபதி

மேலதிக பரிசீலனை

அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான மேலதிக பரிசீலனையை ஜூன் 24 வரை ஒத்திவைத்தது. இந்த மனு ஆரம்பத்தில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்ற வழக்குகளில் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள்! விசாரணை மையத்தில் ராஜபக்சர்கள் | Three Members The Rajapaksa Family In Court Cases

இருப்பினும், நீதியரசர் பெர்னாண்டோ தனிப்பட்ட காரணங்களைக் கூறி வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நீதியரசர் சரத் திசாநாயக்க அந்த அமர்வில் சேர்க்கப்பட்டார்.

இதன்படி கோட்டாபயவுக்காக முன்னிலையான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் தனது கட்சிக்காரருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்பட்ட எந்தவொரு விசாரணையின்போதும் ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் சம்பவம் - போதைப்பொருளுடன் இருவர் கைது

தென்னிலங்கையில் சம்பவம் - போதைப்பொருளுடன் இருவர் கைது

சஷீந்திர ராஜபக்ச 

இதற்கிடையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச மற்றும் மேலும் இருவர் மீது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.

நீதிமன்ற வழக்குகளில் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள்! விசாரணை மையத்தில் ராஜபக்சர்கள் | Three Members The Rajapaksa Family In Court Cases

குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற இருவர் செபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி கொட்டாகம என அடையாளம் காணப்பட்டனர்.

அரகாலய காலத்தில் நடைபெற்ற வன்முறையில் சேதமடைந்த இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்காக ரூ. 8.8 மில்லியன் மதிப்பிலான இழப்பீட்டை சட்டவிரோதமாகப் பெற்றதாக இந்த மூவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 30 சாட்சிகளையும் 35 நீதிமன்ற ஆவணங்களையும் அரசுத் தரப்பு பட்டியலிட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்தில் வீழ்ச்சி : மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானத்தில் வீழ்ச்சி : மத்திய வங்கி அறிவிப்பு

யோஷித ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய ரோயல் கடற்படை அகாதமியில் தன்னைச் சேர்த்துக் கொள்வது தொடர்பான ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் CIABOC-ஆல் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற வழக்குகளில் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள்! விசாரணை மையத்தில் ராஜபக்சர்கள் | Three Members The Rajapaksa Family In Court Cases

அவர் கொழும்பு பிரதம நீதவான் அசங்க போதரகம முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் யோஷித தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள மூன்று சரீர பிணைகளில் செல்ல உத்தரவிடார்.

வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு

வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026