மகிந்தவின் மகனின் கடற்படை வழக்கு! விசாரணையை தவிர்த்த கடற்படை தளபதி
கடற்படையின் முன்னாள் தளபதியும் கடற்படையின் அட்மிரலுமான வசந்த கரன்னகொடா, உடல்நலக் குறைபாடு காரணமாக இன்று லஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாக முடியவில்லையென என தெரிவித்துள்ளார்.
தகுதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு, யோஷித ராஜபக்ச எவ்வாறு இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டார் என்பது குறித்தும், பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தி பிரித்தானிய றொயல் கடற்படைக் கல்லூரியில் அவர் எவ்வாறு பயிற்சி பெற்றார் என்பது குறித்தும் நடத்தப்படும் விசாரணைக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே ஆணைக்குழுவினால் கரன்னகொடா அழைக்கப்பட்டிருந்தார்.
இதற்கு முன்னதாகவும் வசந்த கரன்னகொடா, ஜூன் 16 ஆம் திகதி லஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
யோஷிதவின் கைது
எனினும், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும், தனக்கு அதற்கான கடிதம் கிடைக்கவில்லை எனக் கூறி அவர் அன்றைய தினம் முன்னிலையாக மறுத்திருந்தார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ச, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று தனிநபர் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |