மூவருக்கு மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்றைய தினம் (16.05.2025) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
மரண தண்டனை வித்திக்கப்பட்ட மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 17 கிலோகிராமுக்கு அதிகளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டனர்.
பின்னர் விளக்கமறியளில் வைக்கப்பட்டு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது குறித்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 5 பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.

பலுசிஸ்தான் சுதந்திர நாடு...! பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம் - அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
